புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் நாடுகடந்த அரசாங்கம் ஒன்று அமைவதை முற்றிலும் விரும்புகின்றார்கள் என கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
ஒபாமாவிற்கான தமிழர்கள் நடத்திய கருத்துக்கணிப்பீட்டில் "தமிழர்கள் இனி செய்யவேண்டியது என்ன?" என்ற தலைப்பில் ஒக்டோபர் 14 ம் திகதி தொடங்கி நவம்பர் 4 ம் திகதி வரை கருத்துக்கணிப்பை நடத்தினார்கள். இதில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் உலகின் பல நாடுகளில் இருந்தும் பங்கு பற்றி இருக்கின்றார்கள்.
இந்த கருத்துக்கணிப்பீட்டில் 93 வீதமானோர் நாடுகடந்த அரசாங்கத்தை உலகில் உள்ள தமிழர்கள் அனைவரையும் அங்கம் வகிக்கும் அரசாங்கமாக கருதுகின்றார்கள்.
நாடுகடந்த அரசாங்கமா அல்லது புகலிட அரசா நல்லது எனக்கேட்டதற்கு 82 வீதமானோர் நாடுகடந்த அரசே வேண்டும் என்றும் 18 வீதமானோர் புகலிட அரசே நல்லது என்றும் கருத்துக்கணிப்பில் வெளிப்படுத்தினார்கள்.
நாடு கடந்த அரசை எங்கு நிறுவுவது என்று வினாவிற்கு நோர்வேயை முதலிடமாகவும், இங்கிலாந்தை இரண்டாவது இடமாகவும், அமெரிக்காவை மூன்றாவது இடமாகவும் கருத்துக்கணிப்பில் வெளிப்படுத்தினார்கள்.
தமிழர்கள் பிற நாடுகளை (அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்றவை) இலங்கை அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிராகப் பன்னாட்டு நீதிமன்றங்களில் போர்க் குற்றங்களைக் கொண்டு வர வலியுறுத்த வேண்டுமா? என்பதற்கு வலியுறுத்த வேண்டும் என 99 வீதமானோர் கருத்துக்கூறியுள்ளனர்.
95 வீதமான தமிழர்கள் இலங்கை அரசாங்கம் தமிழர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பன்னாட்டு அரசாங்கத்தினால் மாற்ற முடியும் என்கின்றார்கள்.
இறுதிக் கேள்வியாக, தமிழர்களின் இறுதியான நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கு 89.9 வீதமானோர் தனக்கென்ற அரசு, முப்படைகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை கொண்ட ஒரு விடுதலைபெற்ற தமிழீழம் வேண்டும் என்றும், 8.56 வீதமானோர் தமிழ் மற்றும் சிங்கள நாடுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு இணைப்பு ஆட்சி, வரிவிதிப்புச் சட்டங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை மட்டும் பொதுவாக இருக்கலாம் என்றும், 1.36 வீதமானோர் தமிழின அங்கீகாரம் மற்றும் ஓரளவிற்கான உள்நாட்டு அதிகாரப் பகிர்வுடன் இந்தியாவில் இருப்பதைப் போல் நடுவண் அரசின் அதிகாரத்திற்குட்பட்ட அரசியலமைப்பு என்றும், 0.18 வீதமானோர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இப்போது இருப்பது போலவே ஏற்றுக் கொள்வது: சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கொழும்புவை மையமாகக் கொண்ட ஒன்றிணைந்த தேசிய அரசு. என்றும் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.
விரிவான கருத்துக்கணிபின் முடிவைப் பார்க்க இங்கே பார்க்கவும்.
http://www.tamilsforobama.com/poll3/resulttamil.asp |