தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு, சென்னைக்கு வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் திருமதி ஹிலாரி கிளிங்டன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி பேசும் படி வேண்டிக்கொள்வதாகும்.


ஜுலை 14, 2011

மதிப்புக்குரிய ஜெ. ஜெயலலிதா
முதலமைச்சர்
தமிழ்நாடு.



மதிப்புக்குரிய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு,

முதல்கண் தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பாகிய நாங்கள், ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் கரிசனையுடன் வெளியிட்ட தீர்க்கமான கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள்; எல்லாவற்றுக்கும் எமது உளமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, எமக்காக குரல் கொடுத்ததன் மூலம் உலகத்தமிழர்களின் தலைவியாக பார்க்கப்படுகின்றீர்கள்.

உங்களுக்கு தெரியும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் திருமதி ஹிலாரி கிளிங்டன் அவர்கள் சென்னைக்கு வரவிருக்கின்றார் என்று. அவர் உங்களை சந்திக்கும்போது, நீங்கள் சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானமும் அதன் முக்கியத்துவம் பற்றியும்பேசுவதோடு, ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட அறிக்கை பற்றியும் அதனை உடனே நடைமுறைப்படுத்தும் படியும் வேண்டிக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் இலங்கை இனப்பிரச்சனையினை முடிவுக்கு கொண்டுவருவதற்கு, தற்போது சுதந்திரம் பெற்ற தென் சூடானில் நடைபெற்றது போன்று ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தி அதில் தமிழ் மக்கள் விரும்புகின்வாறு தீர்வை பெற்றுத்தர உதவும் படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நன்றி

உண்மையுள்ள
தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு