கருத்துக்கணிப்பு: வன்னியில் என்ன செய்யப்பட வேண்டும்?

ஒபாமாவுக்கான தமிழர்கள் உலகெங்குமுள்ள தமிழர்களுக்கிடையே வன்னி நிலைவரம் பற்றி அவர்களது கருத்தைக் கேட்டு வாக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள். இந்த கருத்துக்கணிப்பு மார்ச் 16-இல் இருந்து மார்ச் 31-வரை இரு வாரங்களுக்கு நடத்தப்படும். ஒபாமாவுக்கான தமிழர்கள் உலகெங்குமுள்ள தமிழர்கள் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்க வேண்டும் என  கேட்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இந்த கருத்துக்கணிப்பில் ஆங்கிலம், தமிழ், மொழிகள் மூலம் பங்கேற்கலாம்.


கருத்துக்கணிப்பில் பங்கேற்க, கீழ்க்கண்டவற்றைச் செய்யவும்.


1. http://www.tamilsforobama.com/polling/polltamil.asp என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

2. கருத்துக்கணிப்பு நிறைவுற்றபின் கேள்விக்குக் கீழ் உள்ள வெற்றிடங்களில் உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, மற்றும் நாடு ஆகியவற்றை நிரப்பி “பதிவு செய்யலாம்” (Submit) பட்டனை அழுத்தவும்.

3. உறுதி செய்யும் (Activation) குறியீட்டைப் பெற்றுக்கொள்ள உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும்.

4. தயவுசெய்து http://www.tamilsforobama.com/polling/activatetamil.asp என்ற தளத்திற்குச் சென்று உங்கள் உறுதி செய்யும் (Activation)குறியீட்டை உள்ளிடுங்கள். பின்னர் "உறுதி செய்யவும்" ("Activation") என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்குக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் காண்பிக்கப்படும்.


ருத்துக்கணிப்பில் பயன்படுத்தப்பட்ட கேள்விகள்:

1. வெளியுலகம் (ஐ.நா மற்றும் மற்ற நாடுகள்) தமிழர்களைக் காப்பாற்றுவதைத் கருத்தில் கொண்டு அதை நிறைவேற்ற ஒரு இராணுவப் பிரிவை அனுப்பினால், வன்னியில் ஸ்ரீலங்காப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என விரும்புவீர்கள்?

2. உலகம் இலங்கைப் போருக்கு ஒரு அரசியல் சட்டத் தீர்வை (இராணுவத் தீர்வை விட) விரும்புகிறதா?

3. பன்னாட்டுச் சமூகம் போரை உடனடியாக நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறீர்களா?

4. தமிழர்களும் மற்றவர்களும்  விடுதலைப்  புலிகள் பற்றிய தங்களது கருத்துக்களில் வேறுபாடு கொண்டுள்ளார்கள். நீங்கள் விடுதலைப் புலிகளை எவ்வாறு குறிப்பிடுவீர்கள்?

5. அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் தீவிரவாதத்தைப் பின்பற்றும் மற்றும் ஆதரிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை வைத்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இந்தப் பட்டியல்களில் இடம்பெற வேண்டுமா?

6. இலங்கை அரசு நலன்புரி மையங்கள் என அழைப்பவற்றைக் கட்டியுள்ளார்கள். இந்த மையங்கள் குறித்த உங்களது கருத்து என்ன?

7. தமிழ் ஈழம் உருவானால், புதிய நாட்டில் விடுதலைப் புலிகளின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?