அமெரிக்கா தமிழர் அமைப்பான ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பினர் தேர்தலில் வென்ற ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தமிழர் அமைப்பான ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பு தேர்தலில் வென்ற ஜெயலலிதவுக்கு வாழ்த்துச் செய்தியையும், ஏன் ஜெயலலிதவை ஆதரிப்பதற்கான காரணத்தைக் காட்டியும் ஒரு கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது. இக்கடிதத்தில் தமிழீழ சுதந்திர நாட்டுக்கு ஜெயலலிதாவின் ஆதரவையும், சமீபத்தில் வெளிவந்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு கொடுத்த ஆதரவினையும் சுட்டிக்காட்டி உள்ளது. இந்த அறிக்கையின் படி சிறிலங்கா அதிபர் ராஜபக்சா, யுத்தக்குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் செய்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பு தேர்தலில் வென்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச்செய்தியையும், ஏன் ஜெயலலிதவை ஆதரிப்பதற்கானதும் மதிப்பதற்கான காரணத்தைக் காட்டியும் ஒரு கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது. 'நாங்கள் பல வருடங்களாகவே ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவினையும் மதிப்பினையும் செலுத்தி வந்துள்ளோம்.' என்று ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார். எமது காரணங்கள் சிலவற்றினை எங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளோம்.

'நீங்கள் கடந்த காலங்களில் செய்த சில துணிச்சலான நடவடிக்கைகளுக்காக நாங்கள் உங்கள் மேல் உண்மையான அன்பையும் மதிப்பையும் வைத்திருந்தோம். தமிழீழ மக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து கொண்டிருந்த வேளையில், நீங்கள் இந்திய அரசு தலையிட்டு தமிழ் மக்களை பாப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். இந்தக்கால கட்டத்தில் தான் சிறிலங்கா அரசு தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துக்கொண்டிருந்த காலம்.

அத்துடன் நீங்கள் பட்டினியாலும் நோயாலும் தவிர்த்துக்கொண்டிருந்த தமிழர்களுக்கு உணவும் மருந்ம் அனுப்பும் படியும் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தீர்கள்.

அத்துடன் நீங்கள் முதல்வராக தெரிவாகும் பட்சத்தில் சுதந்திர தமிழீழத்திற்காக உழைக்கப்போவதாகவும் கூறியிருந்தீர்கள்.
உங்களை மூன்று விடையங்களுக்காக மரியாதை செலுத்துகின்றோம். முதலாவதாக நீங்கள் ஈழத்தமிழரை படுகொலையில் இருந்து காக்கத்தவறிய ஊழல் நிறைந்த தி.மு.க. அரசின் கறை படிந்த ஆட்சியை அகற்றி உள்ளீர்கள். தி.மு.க. தமிழர்களை அமெரிக்காவிலும் உலகம் பூராவும் தலைகுனிய வைத்தது.

இரண்தாவதாக சமீபத்தில் வெளிவந்த ஜக்கிய நாடுகள் அறிக்கையை இந்தியாவை ஆதரிக்கும் படி கோரி இருந்தீர்கள். இந்த அறிக்கையின் படி சிறிலங்கா அதிபர் ராஜபக்சா இனப்படுகொலையும், யுத்தக்குற்றங்களையும் புரிந்திருக்கின்றார்.
மூன்றாவதாக சிறிலங்கா அதிபரை குற்றவாளிக் கூண்டிலில் நிறுத்துவதற்காக சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதாரத்தடையை விதிக்கும் படி இந்தியாவைக் கோரியிருந்தீர்கள்.

நாங்கள் இதற்கு முன்னரும் ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார் ஒபாமாவுக்கான தமிழர் பிரதிநிதி. சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கடிதத்தில், ஒரு சிங்கத்தை ஒரு எருமை மாடு தன் கன்றுகளைக் காப்பாற்றுவதற்காக அடித்து விரட்டியது. இவ் வீடியோ கொலை வெறி பிடித்த சிங்கள இராணுவத்திடம் இருந்து எம் தாயான ஜெயலலிதா எம்மைக் காப்பதற்கு ஒப்பானதாகும்.

கடித இறுதியில் நாங்கள் மரியாதைக்குரிய ஜெயலலிதாவுக்கு முதல்வராக வந்தமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அவர் கடந்த இரு வருடமாக கூறியவற்றை செய்து முடிக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் எழுதியுள்ளோம்.