அன்புக்குரிய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு,

முதற்கண் ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பான நாம், வட அமெரிக்கா தமிழர்கள் சார்பாக உங்கள் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழக மக்கள் மிக சிறந்த முடிவை சரியான நேரத்தில் எடுத்துள்ளார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.

கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எமது பாராட்டுக்களையும், அன்பையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழீழ மக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து கொண்டிருந்த வேளையில் நீங்கள் இந்திய அரசை தலையிட்டு தமிழ் மக்களை காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். அத்துடன் நீங்கள் பட்டினியாலும், நோய்களாலும் தவிர்த்துக்கொண்டிருந்த தமிழர்களுக்கு உணவும், மருந்தும் அனுப்பிவைக்கும் படி வேண்டியிருந்ததையும் நாங்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். அத்துடன் நீங்கள் தமிழக முதலமச்சராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நீங்கள் சுதந்திர தமிழீழத்துக்காக நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக கூறியதை நாம் மிகவும் பெருமையுடன் கேட்டு மகிழ்ந்தோம்.

நாங்கள் உங்களை மூன்று விடையங்களுக்காக மரியாதை செலுத்துகின்றோம். முதலாவதாக நீங்கள் ஈழத்தமிழரை படுகொலையில் இருந்து காக்கத்தவறிய ஊழல் நிறைந்த தி.மு.க. அரசின் கறை படிந்த ஆட்சியை அகற்றி உள்ளீர்கள். தி.மு.க. தமிழர்களை அமெரிக்காவிலும் உலகம் பூராவும் தலைகுனிய வைத்தது.

இரண்தாவதாக சமீபத்தில் வெளிவந்த ஜக்கிய நாடுகள் அறிக்கையை இந்தியாவை ஆதரிக்கும் படி கோரி இருந்தீர்கள். இந்த அறிக்கையின் படி சிறிலங்கா அதிபர் ராஜபக்சா இனப்படுகொலையும், யுத்தக்குற்றங்களையும் புரிந்திருக்கின்றார்.

மூன்றாவதாக சிறிலங்கா அதிபரை குற்றவாளிக் கூண்டிலில் நிறுத்துவதற்காக சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதாரத்தடையை விதிக்கும் படி இந்தியாவைக் கோரியிருந்தீர்கள்.

நீங்கள் தமிழக முதல்வராக வந்ததையிட்டு எமது வாழத்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் நீங்கள் கடந்த இரண்டு வருடமாக துணிச்சலான கருத்துக்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது.

உண்மையுள்ள

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.