”ஸ்ரீலங்காவின் கொலைக்களம்” ஒபாமா, கிளின்ரனை அடைகிறது!


நியுயோர்க்-- யூலை 25, 2011

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சிச் சேவையின் விவரணப்படமான “ஸ்ரீலங்காவின் கொலைக்களம்’ டிவிடி பிரதிகளை வினியோகித்து வருகிறது. ஸ்ரீலங்காவின் கொடூரத்தைச் காண்பிக்கும் இக்காட்சியை அதிக பார்வையாளர்கள் காணும்போது தமது நோக்கத்திற்கான அனுதாபமும் அந்நோக்கம்பற்றிய அறிவையும் உலக மக்களிடையே கொண்டுவரும் என இந்த தமிழர் அமைப்பு நம்புகிறது.

அத்துடன் இந்த டிவிடி ஆனது வினியோகிக்கப்பட்ட காங்கிரஸ் சபைசார் வட்டாரங்களில் பேசப்படும் விடயமாகவும் மாறும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதனை ஒபாமாவும் அமைச்சர் கிளின்ரனும் அறிய ஆவல் கொள்வார்களாதலால் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஒபாமாவுக்கும் கிளின்ரனுக்கும் டிவிடி பிரதிகளை அனுப்பிவைத்துள்ளது. “அரசியல் தலைவர்கள் தம்மைச்சுற்றி என்ன நிகழ்கிறது என அறிய ஆவலாய் இருப்பர்” என்றார் ஒபாமாவுக்கான தமிழர் எனும் அரசியல் அமைப்பின் பேச்ச்சாளர். “காங்கிரஸ் பிரதிநிதி ஒவ்வொருவரையும் இங்கிலாந்து சனல் 4 விவரணப்படம் ‘ஸ்ரீலங்காவின் கொலைக்களம்’ டிவிடியை பார்வையிடச் செய்ய எம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்” அத்துடன் காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் அலுவலர்கள் மத்தியில் இதுபற்றிப் பேசப்படும் எனவும் எதிர்பார்க்கிறோம். மேலும் அதிபர் ஒபாமா மற்றும் அமைச்சர் கிளின்ரன் ஆகியோரும் தற்கால நிகழ்வுகளைப் பற்றி அறிந்திருக்க விருப்பப்படுவர் , ஆகவே அவர்களுக்கும் நாம் பிரதிகளை அனுப்பியுள்ளோம்.

“ஸ்ரீலங்காவின் கொலைக்களம்” ஆனது பிரித்தானிய சனல் 4 இன் செய்திப்பிரிவால் தயாரிக்கப்பட்ட ஒரு விவரணப்படமாகும். அது ஸ்ரீலங்கா அரசினால் உள்நாட்டு யுத்தகாலத்திலும் இன்றும் நிகழ்த்தப்படும் கொடூரங்களையும் வன்செயல்களையும் சொல்கிறது. இவ்விவரணப்படம் ஸ்ரீலங்கா அரசின் செயற்பாடுகளை விபரிக்க “போர்க்குற்றம்” என்கின்ற சொற்பதத்தைப் பயன்படுத்துகிறது. “நாம் இந்த விவரணப்படத்தை எம்மால் தொடர்புகொள்ள முடிந்த எல்லா முக்கியநபர்களுக்கும் செல்வாக்குச்செலுத்தக்கூடிய நபர்களுக்கும் வினியோகித்து வருகிறோம்” என்கின்றார் அப்பேச்சாளர். “இவ்வுலகத்தில் இருக்கும் எல்லா புத்திஜீவிகளுக்கும், ஸ்ரீலங்காவில் என்ன நடந்தது எனவும் – இன்னும் என்ன நடக்கிறது எனவும் சொல்லப்பட வேண்டும்” ஸ்ரீலங்காவின் கொடூரங்கள் பரந்துபட்ட மக்களைச் சென்றடையும் போது அது ஸ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணங்களில் அமையும் தமிழருக்கான தனியரசினை நோக்கிய இலக்கிற்கு அருகாமையில் தம்மை இட்டுச்செல்லும் என நம்புகிறார்கள் அவர்கள். ”ஸ்ரீலங்காவின் கொடூரம்பற்றிய வோஷிங்ரனில் நிகழும் விழிப்புணர்வு எமது குறிக்கோளை நோக்கிய ஒரு படியாகும்” என்றார் அவர்.

”ஒபாமா மற்றும் கிளின்ரனின் விழிப்புணர்வு இதில் முக்கிய பங்காகும்”

ஒபமாவுக்கு அனுப்பிய கடிதத்தைப்படிக்க கீழுள்ள சுட்டிக்குச் செல்லவும்.
http://www.tamilsforobama.com/Letters/SriLankas-killings-fields-letter-obama-clinton.html

“நாங்கள் தென்சூடானில் நிகழ்ந்தது போல ஒரு பொதுசனவாக்கெடுப்பை நிகழ்த்தக்கோரி உலகளாவிய கையெழுத்து வேட்டையொன்றையும் ஆரம்பித்துள்ளோம். இச்செய்திக்குறிப்பின் முடிவில் அதற்கான சுட்டி தரப்படும்” என அப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

விண்ணப்பத்தைப் படித்துக் கையெழுத்திட http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp க்குச் செல்லவும்.



ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது அரசியல் செயற்பாடுகளில் ஆர்வமுள்ள தமிழ் அமெரிக்கர்களைக் கொண்ட அமைப்பாகும். நாம் ஹிலரி கிளின்ரனையும் ஒபாமாவையும் ஜனநாயகக்கட்சி உட்கட்சித்தேர்தலிலும் 2008 இல நடந்த ஜனாதிபதித்தேர்தலிலும் ஆதரித்தோம். அண்னளவாக 70,000 தமிழ்ப்பொதுமக்கள் இறுதி வாரங்களில் கொல்லப்பட்டார்கள் என நாம் நம்புகிறோம். போர்முடிவில் ஸ்ரீலங்கா சிங்கள வெற்றியாளர்களின் நடத்தைகளை நாம் அவதானித்தோம், இந்த துரதிஷ்டம் பிடித்த ஸ்ரீலங்கா தேசம் இரு தனி அரசுகளாகப்பிரிக்கப்படுவது மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழ வழிகோலும் என முடிவு செய்துள்ளோம்.

இவ்வமைப்பின் செய்தித்தொடர்பாளரை தொடர்புகொள்ள, அல்லது செய்தியொன்றை பதிவுசெய்ய (617) 765-4394 என்கின்ற இலக்கத்தினை அழைக்கவும் அல்லது மின்னஞ்சல் info@TamilsforObama.com இல் தொடர்பு கொள்ளவும்

மேலதிக விபரங்கள் http://www.TamilsForObama.com